
ரணில் விக்ரமசிங்க இன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
விசாரணை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் நியூயோக்கிற்கு உத்தியோகோபூர்வ விஜயம் மேற்கொண்டு நாடு திரும்புகின்றபோது ,அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டன் சென்றமை தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
CATEGORIES Sri Lanka

