
யாழில் கடைக்குச் சென்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் நேற்று (21) பகல் பொருட்களை வாங்குவதற்காக கடைக்குச் சென்ற நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
முத்தமிழ் வீதி, கொட்டடி பகுதியைச் சேர்ந்த சின்னையா பிரேமந் எனும் 58 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது மரணம் தொடர்பான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளார்.
CATEGORIES Sri Lanka

