
கொழும்பு கண்டி பிரதான வீதிப் போக்குவரத்து,பெரஹெரவையொட்டி இன்று மாலை 6 மணி முதல் வரக்காபொல வரை மட்டுப்படுத்தப்படுகிறது
இன்று நடைபெறுகின்ற , வாரக்காபொல, அம்பேபுஸ்ஸ ஸ்ரீ பத்தினி தேவாலாய
தேவ பெரஹெராவையொட்டி கொழும்பு-கண்டி பிரதான வீதிப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேவ பெரஹெரா இன்று மாலை 6 மணி முதல்,அம்பேபுஸ்ஸ தேவாலய சந்தியிலிருந்து, கொழும்பு-கண்டி பிரதான வீதிக்குள் பிரவேசித்து ,கொழும்பு-கண்டி வீதிகளில் வலம் வந்து, அதே வீதியில் கண்டி நோக்கிச் செல்லும்.
பின்னர் பேரெஹெர அம்பேபுஸ்ஸ சந்தி, மஹேன பிரதேச செயலக சந்தி, மஹேன வளைவு ஆகியவற்றின் வழியாக வலம் வந்து ,அதே வீதி வழியாக மீண்டும் தேவாலயத்திற்குச் செல்லும்.
பேரெஹெர ஊர்வலத்தின் போது கொழும்பு-கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், அந்த நேரத்தில் இந்த வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்கள் பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மாற்று வழிகள்
கொழும்பிலிருந்து, கொழும்பு-கண்டி வீதியில் வரும் வாகனங்கள் பஸ்யால சந்தியிலிருந்து நிட்டம்புவ கிரியுல்ல வீதி வழியாக மீரிகமவுக்குச் சென்று அதிவேகப் பாதையைப் பயன்படுத்தி குருநாகல் மற்றும் கண்டி நோக்கிச் செல்லலாம்.
கொழும்பிலிருந்து ,கொழும்பு-கண்டி வீதியில் வரும் வாகனங்கள், வெவெல்தெனிய சந்தியிலிருந்து வெவெல்தெனிய மீரிகம வீதிக்குச் சென்று அதிவேகப் பாதையைப் பயன்படுத்தி குருநாகல் மற்றும் கண்டி நோக்கிச் செல்ல முடியும் .
கொழும்பிலிருந்து, கொழும்பு-கண்டி வீதியில் வரும் வாகனங்கள் நெலுந்தெனிய சந்தியிலிருந்து நெலுந்தெனிய அலவ்வ சாலையைப் பயன்படுத்த முடியும் என போலீஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது

