
சிற்றியிலிருந்து வெளியேறும் மனுவல் அகஞ்சி
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் பின்களவீரரான மனுவல் அகஞ்சியைக் கைச்சாத்திடுவதற்கான அணுகலை இன்னொரு பிறீமியர் லீக் கழகமான கிறிஸ்டல் பலஸ் மேற்கொண்டுள்ளது.
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு சிற்றியில் அகஞ்சி இணைந்திருந்தார்.
துருக்கியக் கழகமான கலடசரே, ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயெர் லெவர்குசனும் அகஞ்சியைக் கைச்சாத்திட முயல்கிறமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sports News

