நாவின்ன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : சந்தேக நபர் கைது

நாவின்ன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : சந்தேக நபர் கைது

மஹரகம, நாவின்ன சந்திக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியில் கடந்த 6ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, 39 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள், கிடைத்த தகவலின் அடிப்படையில் கொட்டாவை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த சந்தேக நபரை கைது செய்ததுடன்
சந்தேக நபரின் வீட்டில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், போர 12 ரக தோட்டாக்கள் மூன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குதெரிவித்துள்ளனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )