பிறைட்டனிடம் தோற்ற மன்செஸ்டர் சிற்றி

பிறைட்டனிடம் தோற்ற மன்செஸ்டர் சிற்றி

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி தோற்றது.

சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை எர்லிங் ஹலான்ட் பெற்றதோடு, பிறைட்டன் சார்பாக ஜேம்ஸ் மில்னர், பிரஜன் க்றூடா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற ஆர்சனலுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது. லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை டொமினிக் ஸபொஸ்லாய் பெற்றிருந்தார்.

இந்நிலையில் அஸ்தன் வில்லாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 3-0 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பலஸ் வென்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )