
யாழில் புகையிரதம் மோதி பெண் ஒருவர் பலி
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்று (03) இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
சுன்னாகத்தை சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம்(03) பயணித்த புகையிரதத்துடன் கொடிகாம பகுதியில் மோதி உயிரழந்துள்ளார்.
தண்டவாளத்தை கடக்க முற்பட்ட வேளையே விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

