3500 கிலோ கிராம் கழிவு தேயிலைகளுடன் இருவர் கைது

3500 கிலோ கிராம் கழிவு தேயிலைகளுடன் இருவர் கைது

சட்டவிரோதமாக 3500 கிலோகிராம் கழிவு தேயிலையை கொண்டு சென்ற இருவரை ஹட்டன் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினர் (07) கைது செய்துள்ளனர்.

கம்பளை – வெலம்பொட பிரதேசத்தில் இருந்து தலவாக்கலை நகருக்கு லொறியொன்றில் கழிவு தேயிலையை கொண்டு செல்வதாக ஹட்டன் ஊழல் தடுப்பு ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் விசேட சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலதிக விசாரணையின்  பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )