
23 மாடி குடியிருப்பில் தீவிபத்து ; ஒருவர் பலி
23 மாடி கட்டிடத்தில் நேற்று (07) ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் தஹிசர் பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த குடியிருபின் ஏழாவது மாடியில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்பு துறையினர் தகவலறிந்து அங்கு விரைந்தனர்.
மீட்புக் குழுவினர் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 36 பேரை மீட்டனர். இவர்களில் 19 பேர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
CATEGORIES India

