
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய ஜொஃப்ரா ஆர்ச்சர்
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இங்கிலாந்தின் ஜொஃப்ரா ஆர்ச்சர் முன்னேறியுள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கெதிரான இறுதி இரண்டு போட்டிகளில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே 19ஆம் இடத்திலிருந்து 16 இடங்கள் முன்னேறி ஆர்ச்சர் மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. கேஷவ் மஹராஜ், 2. மகேஷ் தீக்ஷன, 3. ஜொஃப்ரா ஆர்ச்சர், 4. குல்தீப் யாதவ், 5. பெர்னார்ட் ஸ்கொல்ட்ஸ், 6. ரஷீட் கான், 7. மிற்செல் சான்ட்னெர், 8. அடில் ரஷீட், 9. மற் ஹென்றி, 10. இரவீந்திர ஜடேஜா
CATEGORIES Sports News

