மெட்ராஸ் மாபியா கம்பெனி படத்தின் டீசர் வெளியீடு

மெட்ராஸ் மாபியா கம்பெனி படத்தின் டீசர் வெளியீடு

‘பாஷா, சூர்ய வம்சம் மற்றும் போக்கிரி’ போன்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பெயர் பெற்றவர் நடிகர் ஆனந்தராஜ் தற்போது அறிமுக இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் ‘மெட்ராஸ் மாபியா கம்பெனி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

அண்ணா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை இப்படத்தை தயாரித்துள்ளனர்.

முனிஷ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது.

இந் நிலையில், ‘மெட்ராஸ் மாபியா கம்பெனி’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )