
நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு !
கலேவெல பகுதியில் உள்ள தேவஹுவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கலேவெல, தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவன் தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
பின்னர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு கலேவெல வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் சிறுவன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

