யானை தந்தங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கைது

யானை தந்தங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கைது

அநுராதபுரத்தில் மொரகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்மில்லேவ பிரதேசத்தில் இரண்டு யானை தந்தங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் மொரகொட பொலிஸாரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் அநுராதபுரம் – கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரான ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய்க்கு சொந்தமான வயலில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )