
புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெரு கடையில் நேற்று தீ பற்றியது ஏன் ? விசாரணைகள் ஆரம்பம்
புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தில் நேற்று மதியம் ஏற்பட்ட தீப்பரவல் , 12 மணி நேர முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மின் கசிவு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
நேற்று மாலை 4 மணியளவில் மின் சாதனம் மற்றும் மொபைல் போன் கடை ஒன்றின் நான்காவது மாடியில் தீப்பற்றியது. பின்னர் அருகிலுள்ள கட்டிடத்திற்கும் தீ பரவியதாக போலீசார் தெரிவித்தனர்.
தீயை அணைக்க 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு இயந்திரங்கள் , ஒரு பெல் 212 விமானப்படை ஹெலிகப்டர் ,பொலிஸார் , கடற்படை, விமானப்படை மற்றும் துறைமுக தீயணைப்புப் படையைச் சேர்ந்த பணியாளர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அரச ஆய்வாளர் மற்றும் நீதிபதி இன்று சம்பவ இடத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை , தீ விபத்து தொடர்பில் விசாரிக்க ஒரு விசேட குழு நியமிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
அடுத்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் புறக்கோட்டை கட்டுமான நடவடிக்கைகள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.
.

