
ஐ .நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஜனாதிபதி இன்றிரவு அமெரிக்கா பயணம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்றிரவு அமெரிக்கா பயணமாகிறார் .
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இன்றிரவு நாட்டிலிருந்து புறப்பட உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
24 ஆம் திகதி ,உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15ற்கு ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.
இந்த விஜயதத்தின்போது ஜனாதிபதி அனுர, அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களையும் சந்திக்க உள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த விஜயத்தில் பங்கேற்ககிறார்.
CATEGORIES Sri Lanka

