ஹோட்டல் நீச்சல் குளத்தில் மூழ்கி மஸ்கெலியாவைச் சேர்ந்த ஒருவர்உயிரிழப்பு

ஹோட்டல் நீச்சல் குளத்தில் மூழ்கி மஸ்கெலியாவைச் சேர்ந்த ஒருவர்உயிரிழப்பு

ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நண்பர்களுடன் ஹோட்டலின் நீச்சல் குளத்தில் இருந்தபோது குறித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கட்டான கந்தவல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா, மவுஸ்ஸாகலை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )