தலாவ-மிரிகம சந்தியில் லொறி – வேன் மோதி மூவர் உயிரிழப்பு

தலாவ-மிரிகம சந்தியில் லொறி – வேன் மோதி மூவர் உயிரிழப்பு

குருநாகல்-அனுராதபுரம் பிரதான வீதி, தலாவ-மிரிகம சந்தியில் லொறி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்தனர்.

இன்று அதிகாலை இந்த விபத்து இடமபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

வேனில் பயணித்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் நால்வர் காயமடைந்தனர்.

வேன் ஓட்டுநர் , லொறி ஓட்டுநர் உட்பட காயமடைந்த ஏழு பேர் தலாவ மற்றும் அனுராதபுர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )