ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத் தலைவர் உபாலி லியனகேவிறகெதிராக குற்றப்பத்திரிக்கை

ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத் தலைவர் உபாலி லியனகேவிறகெதிராக குற்றப்பத்திரிக்கை

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத் தலைவர் உபாலி லியனகே ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகற்றும் பணியை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்ததால் அரசாங்கத்திற்கு 2.6 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுத்தியதாக கூறி வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இவ்விடயத்தை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத் தலைவர் உபாலி லியனகே ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

தற்போது அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கு 2026 ஜனவரி 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )