
கரூர் சம்பவம் ; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசின் சார்பில் நிவாரணம்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கரூர் பெருந்துயரத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரமர் மோடி அறிவித்துள்ளார்.
மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறி்பிடத்தக்கது.
CATEGORIES India

