கரூர் சம்பவம் ; பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு

கரூர் சம்பவம் ; பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு

கரூர் வேலாயுதம்பாளையத்தில் சனிக்கிழமை (27) தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.

நேற்று (28) இரவு நிலவரப்படி 40 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறி்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )