செம்மணிப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

செம்மணிப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று (01) ஒத்திவைத்துள்ளது.

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெறாதமையாலேயே இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிக்கான பாதீட்டுக்கான அங்கீகார அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்க அரச சட்டத்தரணி கால அவகாசம் கோரினார். இதைத் தொடர்ந்தே வழக்கு எதிர்வரும் 13 ஆம் திகதிக்குத்  தவணையிடப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )