
ஆனமடுவ பிரதேச செயலகம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
ஆனமடுவ பிரதேச செயலகம் 160 மில்லியன் ரூபாய் மக்களின் பணத்தை செலவிட்டு புத்தளம் மாவட்டத்தின் ஆனமடுவ நகரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பிரதேச செயலகம் புதிய மூன்று மாடி கட்டடத் தொகுதியை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு, பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபயரத்ன தலைமையில் நேற்று (01) நடைபெற்றது.
ஆனமடுவ பிரதேச செயலகம் 35 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.
அங்கு 140 கிராமங்களில் 14,763 குடும்பங்களில் 44,483 நபர்கள் வசிக்கின்றனர்
இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கயான் சானக, மாவட்ட செயலாளர் வை. ஐ. எம். சில்வா, ஆனமடுவ பிரதேச செயலாளர் சஞ்சய லக்ஷ்மால் உட்பட அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
புத்தளம் மாவட்ட ஊடகப்பிரிவு

