
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன்’ படம் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
‘மூக்குத்தி அம்மன்’ முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும், ஆர்.ஜே. பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
CATEGORIES Cinema

