
இந்தோனேசியாவில் பாடசாலை இடிந்த விபத்து ; 37 பேர் பலி
இந்தோனேசியாவின் சிடோர்ஜோ நகரில் பாடசாலை கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த 29-ந்திகதி இடிந்து விழுந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கிய 65 மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. 14 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். சிலர் உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.
இதையடுத்து பலி எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 26 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, இன்று காலை நிலவரப்படி 37 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 104 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர் என்றனர்.
CATEGORIES World News

