
STR 49 படத்தின் டைட்டில் வெளியானது
நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வைரலானது.
இந்நிலையில், ‘எஸ்டிஆர் 49’ படத்தின் தலைப்பு ‘அரசன்’ என்று கலைப்புலி எஸ்.தாணு எக்ஸ் தள பக்கத்தில் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார்.
போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
CATEGORIES Cinema

