
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பல மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளைகளில் மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளைகளில் மூடுபனி நிலவக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்த்துள்ளது.
மின்னல் தாக்குதல்கள் மற்றும் இடியுடன் கூடிய மழைய, தற்காலிகமாக வீசும் பலத்த காற்று அஆகியவற்றினால் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை ஆய்வுத் துறை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

