கல்கிஸ்ஸ நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் அதிகாரி – வழக்கறிஞர் மோதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

கல்கிஸ்ஸ நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் அதிகாரி – வழக்கறிஞர் மோதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் கடமையிலிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் சட்டத்தரணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கல்கிசை போலீஸ் தலைமையகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

வழக்கறிஞர் ஒருவர் காரை வெளியே எடுக்க முற்பட்ட போது , angu பாதுகாப்பு கடமையில் இருந்த போலீஸ் அதிகாரிக்கும் சட்டத்தரணிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட.து .

பின்னர் அது மோதலாக மாறி , போலீஸ் அதிகாரி வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து ,கல்கிசை போலீசார் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

குறித்த போலீஸ் அதிகாரிக்கு 13 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..

, இந்த சம்பவத்தில் தொடர்புடைய வழக்கறிஞருடன் வந்த மற்றுமொரு சிரேஷ்ட வழக்கறிஞர் ஒருவர் ,சம்பவத்த்துடன் தொடர்புடைய போலீஸ் அதிகாரியை மிரட்டல் தொனியில் பேசியதாக கூறப்படுவது தொடர்பிலும் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போலீஸ் அதிகாரியை வழக்கறிஞர் அச்சுறுத்துவதாக கூறப்படும் வீடியோ காட்சிகள் அடங்கிய சீடி ஒன்று ஆதாரமாகப் பெறப்பட்டு, மேலதிக விசாரணைக்காக போலீஸ் நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவம்நடைபெற்ற போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த பலரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்கிசை பிரிவின் சிரேஷ்ட போலீஸ் கண்காணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் கல்கிசை தலைமையக போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்,

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )