கொழும்பின் சில பகுதிகளில் அமுல்படுத்தப்படும்நீர்வெட்டு காலத்தை மேலும் குறைக்க நடவடிக்கை

கொழும்பின் சில பகுதிகளில் அமுல்படுத்தப்படும்நீர்வெட்டு காலத்தை மேலும் குறைக்க நடவடிக்கை

கொழும்பின் பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட நீர்வெட்டு காலத்தை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

தற்போது நிலவும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, நீர் விநியோகத் தடையை 8 முதல் 12 மணித்தியாலங்களாகக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீர் வழங்கல் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

தொடரும் வறட்சியான காலநிலை நீர் விநியோகத்தைப் பாதித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பாதுக்கை, ஹோமாகம, பெலன்வத்தை மற்றும் பன்னிப்பிட்டிய போன்ற பகுதிகளில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

பொதுமக்களின் அசௌகரியங்களைக் குறைக்கும் நோக்கில், நேற்று நீர்வெட்டு காலத்தை 24 மணித்தியாலங்களிலிருந்து 18 மணித்தியாலங்களாகச் சபை குறைத்திருந்ததுடன், அதனை மேலும் குறைப்பது குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )