ஈரான் ஒரு உடன்பாட்டிற்கு வர 48 மணிநேரம் மட்டுமே அவகாசம்- இல்லையெனில் அமெரிக்கா ‘நரகத்தை’ அவிழ்த்துவிடும் – டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் ஒரு உடன்பாட்டிற்கு வர 48 மணிநேரம் மட்டுமே அவகாசம்- இல்லையெனில் அமெரிக்கா ‘நரகத்தை’ அவிழ்த்துவிடும் – டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்கு அல்லது ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பதற்கு இன்னும் 48 மணிநேரம் மட்டுமே எஞ்சியுள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அவ்வாறு செய்யத் தவறினால் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக ‘நரகத்தை’ அவிழ்த்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைதளப் பதிவில் அவர் பின்வருவனவற்றைத் தெரிவித்துள்ளார்:

இந்த விவகாரத்தைத் தீர்ப்பதற்கு ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது இன்னும் 48 மணிநேரம் மட்டுமே எஞ்சியுள்ளது, காலம் கடந்து கொண்டிருக்கிறது.

ஈரான் பணிய மறுத்தால், அமெரிக்கா மிகக் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பதை ‘Hell’ நரகம் என்ற வார்த்தையின் மூலம் டிரம்ப் சூசகமாக உணர்த்தியுள்ளதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )