நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 4,544 பேர் கைது

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 4,544 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4,544 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 26 பேரும், சந்தேகத்தின் பேரில்  676 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 204 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 138 பேரும், மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 67 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 11 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 3422 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )