இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.

மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு கனமழை பதிவாகும் வாய்ப்பும் உள்ளது.

மேலும், தெற்கு மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில் காலை நேரத்திலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனுடன், மத்திய, சபரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனி நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )