
காத்தான்குடியில் தலைக்கவசம் அணியாது பயணித்த 55 பேர் கைது !
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (07) காலை காத்தான்குடி கடற்கரை மற்றும் ஆற்றங்கரை பிரதேசங்களுக்கு பெருநாள் தொழுகைக்காக சென்ற அதிகமான இளைஞர்கள் தலைக்கவசம் அணியாது சென்றுள்ளனர்.
தலைக்கவசம் அணியாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்கின்ற அறிவித்தலை பொலிஸார் முன்பே அறிவித்த போதிலும் அவற்றை உதாசீனம் செய்து தலைக்கவசம் அணியாது பயணித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

