நெதர்லாந்து மியூசியத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை!’ 

நெதர்லாந்து மியூசியத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை!’ 

200 ஆண்டுகள் பழமையான ஆணுறை ஒன்று நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணுறையில், ஒரு கன்னியாஸ்திரி மற்றும் மூன்று மதகுருமார்கள் இருக்கும் வரைபடம் அச்சிடப்பட்டுள்ளது.

அந்த காட்சிக்கு கீழ் “வோய்லா மோன் சோயிக்ஸ்” ( இது என்னுடைய விருப்பம் என்று பொருள்படும்) பிரெஞ்சு மொழியில் ஒரு தலைப்பும் உள்ளது.

ஆறு மாதங்களுக்கு முன்பு ஹார்லெமில் நடந்த ஏலத்தில் ரிஜ்க்ஸ்மியூசியம், இந்த ஆணுறையை வாங்கி இருக்கிறது.

ரிஜ்க்ஸ் மியூசியத்தின் அச்சு பொருள்களின் கண்காணிப்பாளரான ஜாய்ஸ் ஜெலன், இதுகுறித்து கூறுகையில்,

”பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த ஆணுறை பயன்படுத்தப்பட்டதல்ல” என்று தெரிவித்துள்ளார்

இது போன்ற ஆணுறைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு செழிப்பான வர்த்தகத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.

அந்த நேரத்தில் ஆணுறைகள் பாலியல் ரீதியாக பரவும் நோய் தொற்றுக்கும், சிபிலிஸுக்கு போன்ற சுகாதார அச்சுறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )