சிறைச்சாலை மருத்துவமனையில் ரணிலை சந்தித்த சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு வருகைதந்துள்ளார்

நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து சிங்கப்பூருக்கு விஜயம் செய்திருந்த சஜித் பிரேமதாச தமது விஜயத்தை முடித்துக்கொண்டு நாட்டுக்குத் திரும்பியதையடுத்து ரணில் விக்ரமசிங்கவைசந்திக்க இன்று காலை வெலிக்கடை சிறைச்சாலைக்கு வருகைதந்துள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )