மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

வத்தளை, மாபோல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியிலுள்ள மூன்று மாடி கட்டிடத்தின், மேற்தளத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்த ஒருவரே, மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் வத்தளை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )