அளுத்கமையில் கடையொன்றில் தீ விபத்து

அளுத்கமையில் கடையொன்றில் தீ விபத்து

அளுத்கமையில் தொலைபேசி பழுதுபார்க்கும் கடையொன்றில் இன்று (13) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ விபத்தில் கடையிலுள்ள பொருட்களுக்கும் அருகிலுள்ள இரண்டு கடைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

களுத்துறை நகர சபை தீயணைப்புத் துறையுடன் அளுத்கம பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )