மடகஸ்காரின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு

மடகஸ்காரின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு

மடகஸ்காரின் புதிய ஜனாதிபதியாக இராணுவ கேர்னல் Michael Randrianirina பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதியாக இருந்த என்ட்ரி ரஜோலினா நாட்டை விட்டு தப்பிச் சென்றதையடுத்து இந்த புதிய பதவி நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி என்ட்ரி ரஜோலினாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில் அவரை பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகளும் அந்நாட்டு இராணுவமும் வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நாட்டை விட்டு தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )