
பங்களாதேஷ் டாக்கா விமான நிலையத்தில் பாரிய தீ விபத்து – விமானங்கள் சேவைகள் இடைநிறுத்தம்
பங்களாதேஷ் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தின் சரக்குப் பிரிவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் தெவிக்கின்றன .
விமான நிலைய தீயணைப்புத் துறை மற்றும் பங்களாதேஷ் விமானப்படை தீயணைப்புப் படை மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.

