
பேலியகொடை துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு!
பேலியகொடை – ஞானரத்ன மாவத்தையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர்உயிரிழந்துள்ளார்.
மோட்டார்சைக்களில் பயணித்துக்கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 45 வயதுடைய நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அதேநேரம், இந்த சம்பவத்தில் குறித்த மோட்டார்சைக்களிற்கு அருகில் பயணித்த பாதசாரி ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு 15 ஐ சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு ரி56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக பொலிசாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்

