50 மில்லியன் பெறுமதியான 2,239,400 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு உள்நாட்டு வர்த்தகர்கள் கைது

50 மில்லியன் பெறுமதியான 2,239,400 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு உள்நாட்டு வர்த்தகர்கள் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு வர்த்தகர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இந்த சந்தேகநபர்களை கைதுசெய்தனர்.

டுபாயில் இருந்து இன்றைய தினம் அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேக நபர்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்கள் இருவரும் கொண்டு வந்த பயணப்பொதிகளில் இருந்து சுமார் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 2,239,400 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன .

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )