யானை தாக்கி பெண் ஒருவர் பலி

யானை தாக்கி பெண் ஒருவர் பலி

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாதகல்மடு பகுதியில் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் காட்டு யானை தாக்கி இன்று (20) பலியாகியுள்ளார்.

குறித்த பெண் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில் சம்பவ தினத்தன்று அதிகாலை யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகியுள்ளார்.

58 வயதுடைய வயிரமுத்து மலர் என்பவரே இவ்வாறு உயரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திடீர் மரண விசாரனை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டதுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை எடுத்துச் சென்று பிரேத பரிசோதனையின் பின்னர் நெருங்கிய உறவினரிடம் சடலத்தை ஒப்படைக்குமாறு வவுணதீவு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )