
25 வயதுக்கு மேற்பட்ட நால்வரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம்
25 வயதுக்கு மேற்பட்ட நால்வரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் பக்கவாதம் (Stroke) ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
களுத்துறை போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணர் மருத்துவர் சுரங்கி சோமரத்ன தெரிவித்ததாவது,
”பக்கவாத நோயாளிகளில் சுமார் 30 சதவீதம் பேர் 20 முதல் 60 வயதுக்குள் உள்ளவர்கள். இந்நோயை கட்டுப்படுத்த தினசரி உடற்பயிற்சியை வழக்கமாக்குவது மிக முக்கியமானது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம்.
நடைபயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது உடல் உழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளில் ஈடுபடுதல் ஆகியவை மூளை நலனுக்குத் துணைபுரியும்,” என தெரிவித்தார்.

