
வடக்கு,கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த காணிகளை விடுவிக்க நடவடிக்கை
வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 672 ஏக்கர் அரசாங்கக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் அவர், ”விடுவிக்கப்பட்ட காணிகளில் 86.24 ஏக்கர் தனியார் காணிகளும் 586 ஏக்கர் இராணுவப் பயன்பாட்டில் இருந்த காணிகளும் அடங்குவதாக கூறப்படுகிறது. கிழக்கில் மட்டும் 34.58 ஏக்கர் அரசாங்கக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.”என தெரிவித்துள்ளார்.

