வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலை ; ”சந்தேக நபர்கள் சில நாட்களில் கைது செய்யப்படுவார்கள்”

வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலை ; ”சந்தேக நபர்கள் சில நாட்களில் கைது செய்யப்படுவார்கள்”

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலைக்கு சம்மந்தப்பட்ட சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் அவர் , ” வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலைக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் 2 முதல் 3 நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள். அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து உயிர்களையும் பாதுகாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )