இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்

150 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணி ஒன்றுக்கு போலி ஆவணங்களைத் தயாரித்து, சொத்தைக் கையகப்படுத்தியமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 

குறித்த சந்தேக நபரான பெண், வேறொருவராக ஆள்மாறாட்டம் செய்து போலி உறுதியில் கையெழுத்திட்டுள்ளதுடன், தலைமறைவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அவர் வசிக்கும் இடம் குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரின் புகைப்படத்தை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதுடன், சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தொலைபேசி இலக்கங்கள் – 

வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு 03 – 011 – 2434504 

நடவடிக்கை அறை – 011 – 2422176 (குற்றப் புலனாய்வுத் திணைக்களம்)

image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )