
பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான தாமதம் மற்றும் பாதிப்புகளைக் குறைப்பதற்காக புதிய பல்பொருள் போக்குவரத்து மற்றும் களஞ்சிய மத்திய நிலையம்
பொருள்க்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து சேவையை விடை திறனாக மேற்கொள்ளும் நோக்கத்துடன் அமைக்கப்படும் பண்டப்பரிமாற்ற மத்திய நிலைய வேலைத் திட்டத்தை எதார்த்தமாக்கும் மேல் மாகாணத்தின் கம்பஹா, வெயன்கொடை போக்குவரத்து மற்றும் களஞ்சிய மத்திய நிலையத்தை நிறுவுவதற்குப் பயன்படுத்தப்படும் நிலப்பகுதியை ஆய்வு செய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க நேற்று (28) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்
உணவுத் திணைக்களத்தின் கீழ் காணப்படும் வெயாங்கொடையில் அமைந்துள்ள 50 ஏக்கர் அளவிலான தற்போது பயன்படுத்தப்படாது காணப்படுகின்ற, கைவிடப்பட்டுள்ள நிலப்பிரதேசத்தை அபிவிருத்திய செய்து இந்த பண்டமாற்று மத்திய நிலையத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான தாமதம் மற்றும் பாதிப்புகளை குறைப்பதற்காக புதிய பல்பொருள் போக்குவரத்து மற்றும் களஞ்சிய மத்திய நிலையம்.
இதில் தற்போது காணப்படும் பொருளாதார மத்திய நிலையத்திற்கு, வாராந்த சந்தைக்கு, படை முகாமிற்கு மற்றும் மருந்து களஞ்சிய சாலைக்கு புதிய பண்டம் பரிமாற்ற மத்திய நிலையத்தை நிர்மாணிப்பதுடன் பல்வேறு வசதிகளும் இங்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு விஜயத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்னாயக்க : ஜனாதிபதி வரவு செலவு தொட்ட யோசனையில் முன்வைத்த பிரகாரம் பொதுப் போக்குவரத்து சேவை, பொருட்களுக்கான போக்குவரத்து சேவை ஆகியவற்றை நெறிப்படுத்த அரசாங்கம் வசதிகளைத் தயாரித்துள்ளது
இத்திட்டத்தின் கீழ் கொழும்பு துறை முகத்தை அண்மித்துள்ள வெயன்கொடை பிரதேசத்தில் இந்த புதிய பல்பொருள் போக்குவரத்து மற்றும் களஞ்சிய மத்திய நிலையத்தை நிருமாணிப்பதற்கு எதிர் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

