
வைத்தியர்களின் பணி புறக்கணிப்பு போராட்டம் ஒத்தி வைப்பு
இன்று காலை 08 மணி முதல் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணி புறக்கணிப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு, சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் சாதகமான பதில் கிடைத்துள்ளதால், பணி புறக்கணிப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, அரச மருத்துவர்கள் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று காலை 08 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்த பணிபுறக்கணிப்பு போராட்டம் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் அமைச்சர் மற்றும் துறைசார் அதிகாரிகளுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடு தொடர்பில் எழுத்துமூலமான உறுதி கிடைக்கப்பெறாவிட்டால் பணி புறக்கணிப்பு தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

