நாளை முதல் பிளாஸ்டிக் பேக்குகளுக்கு கட்டணம்

நாளை முதல் பிளாஸ்டிக் பேக்குகளுக்கு கட்டணம்

பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணங்க, நாட்டிலுள்ள முக்கிய விற்பனை நிலையங்கள் நாளை (01) முதல் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் அறவிடப்படவுள்ளது.

வியாபார நிலையங்களில் வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2456/41 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடுத்தர அளவிலான கைப்பிடி பைக்கு 3 ரூபாவாகவும், பெரிய கைப்பிடி பைக்கு 5 ரூபாவாகவும் ஆகவும் கட்டணம் அறவிடப்படவுள்ளது.

சுற்றுச்சூழல் ரீதியாக பொறுப்பான பொருட்கொள்வனவு நடைமுறைகளுக்கு மாறுவதனை ஆதரிக்க பொதுமக்களை வலியுறுத்துவதாக, இந்த திட்டம் அமைந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )