கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து நடிகைகள் CIDக்கு அழைப்பு

கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து நடிகைகள் CIDக்கு அழைப்பு

கெஹெல்ப்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து நடிகைகளிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன

வெளிநாட்டு பயணம்சென்ற போது கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து நடிகைகளுக்கு அழைப்பாணை அனுப்பி அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்து , இந்த நடிகைகள் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், பணமோசடி அல்லது ஆயுதங்கள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டார்களா என்பதைக் கண்டறிய மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக CID தெரிவித்துள்ளது.

முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, நவம்பர் 7 ஆம் திகதி விசாரணைகளின் முன்னேற்றத்தை முன்வைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் CIDக்கு உத்தரவிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )