
காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி
ஹட்டன் – கித்துல்கல வீதியில் 39ஆவது கிலோமீட்டர் தூண் அருகில் காரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேர் எதிரே மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் பலத்த காயமடைந்த நிலையில் தெலிகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கித்துல்கல பகுதியைச் சேர்ந்த 44 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தெலிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கித்துல்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

